கொல்கத்தா மேம்பால விபத்து கடவுள் விடுத்த எச்சரிக்கை: சொல்கிறார் பிரதமர் மோடி

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
கொல்கத்தா மேம்பால விபத்து கடவுள் விடுத்த எச்சரிக்கை: சொல்கிறார் பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த மேம்பால கட்டிட விபத்து கடவுள் விடுத்த எச்சரிக்கை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் அங்கு இரண்டாம் கட்டத்திற்கான பரப்புரை சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வங்காள மாநிலத்தின் மடரிஹட், ஆசன்சோல் மற்றும் சிலிகுரி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

கொல்கத்தா மேம்பால கட்டிட விபத்து கடவுள் விடுத்துள்ள எச்சரிக்கை என கூறியுள்ளார்.

திருணமூல் காங்கிரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அது என்றார்.

மேம்பால விபத்து என்பது மிகவும் மோசமான விபத்து. திறமையான தலைவர் என்றால் அவர் மக்களை காப்பாற்றவே முனைப்பு காட்டுவார்.

ஆனால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பழியை இடதுசாரிகள் மீது போட்டு விட்டு தப்பிக்க பார்க்கிறார்.

இறந்தவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க மம்தா பானர்ஜி தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய மோடி,

அவரது எண்ணத்தில் தற்போது முதல்வர் நாற்காலி மட்டுமே, அப்பாவி மக்கள் அல்ல என கடுமையாக சாடினார்.

மூலக்கதை