பெண் பொலிசார் மீது வாகனத்தை ஏற்றி கொன்ற நபர் யார்?: பொலிசார் தீவிர விசாரணை (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
பெண் பொலிசார் மீது வாகனத்தை ஏற்றி கொன்ற நபர் யார்?: பொலிசார் தீவிர விசாரணை (வீடியோ இணைப்பு)

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Langford என்ற நகரில் சாரா பெக்கட்(32) என்ற பெண் பொலிசார் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.

பொலிஸ் வாகனத்தில் நகரத்தை சுற்றி வரும்போது, அவரது காரில் மற்றொரு கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாரா பெக்கட் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி உயிரிழந்ததை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை அன்றே கைது செய்தனர்.

ஆனால், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் குற்றமற்றவர் என நிரூபனம் ஆனதால் நேற்று பொலிசார் அவரை விடுதலை செய்தனர்.

இந்த விசாரணையை நடத்தி வரும் Janelle Shoihet என்ற பொலிஸ் அதிகாரி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, ‘சாரா பெக்கட் ஒரு திறமையான பொலிஸ் அதிகாரி. ஆனால், அவரது மரணம் காவல் துறைக்கு ஒரு பெரும் இழப்பு.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரை நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், அதிகாலையில் நிகழ்ந்த இந்த மரணம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும், இது குறித்து தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக் கொள்ளலாம்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை