ராணுவ வீரரின் ஞாபக மறதிக்கு கிடைத்த தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

COOL SWISS  COOL SWISS
ராணுவ வீரரின் ஞாபக மறதிக்கு கிடைத்த தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சுவிஸின் St Gallen நகரை சேர்ந்த 24 வயதான ராணுவ வீரர் ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சுவிஸ் ராணுவ விதிமுறைப்படி பயிற்சி முடிந்தவுடன் துப்பாக்கியை பாதுகாப்பாக பிரித்து வைக்க வேண்டும்.

ஆனால், இந்த ராணவ வீரர் துப்பாக்கியை தவறுதலாக தன்னுடைய காரிலேயே வைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

பின்னர், காரை எடுத்துக்கொண்டு சுவிஸ் எல்லையை தாண்டி ஜேர்மனி நாட்டிற்குள் நுழைந்துள்ளார்.

ஆனால், ஜேர்மனியை விட்டு வெளியேறியபோது எல்லை பாதுகாப்பு பொலிசாரால் பரிசோதிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.

’இது ஞாபக மறதியில் நிகழ்ந்தது’ எனக்கூறி ராணுவ வீரர் பலக் கட்டங்களாக போராடியுள்ளார்.

ஆனால், ஜேர்மன் சட்டப்படி ராணுவ துப்பாக்கியை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வருவது தவறு.

எனவே, குற்றம் செய்த சுவிஸ் ராணுவ வீரர் ஒவ்வொரு நாள் 90 யூரோ வீதம் 90 நாட்களுக்கு(8,800 யூரோ) செலுத்த வேண்டும் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளார்.

மூலக்கதை