மேடையில் பாம்புகளுடன் ஆட்டம் போட்ட பெண் பாடகர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
மேடையில் பாம்புகளுடன் ஆட்டம் போட்ட பெண் பாடகர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)

மேற்கு ஜாவாவில் உள்ள Karawang என்ற நகரில் இர்மா ப்ளூ(29) என்ற பெண் ’பாப் பாடகர்’ ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

இவரது கச்சேரியில் வழக்கமாக சிறிய பாம்புகள் முதல் மலைப்பாம்புகளை வரை தனது உடலில் சுற்றிக்கொண்டு பாடல்களை பாடுவதில் பிரபலமானவர்.

ஆனால், குறிப்பிட்ட இந்த நாளில் மலைப்பாம்பிற்கு பதிலாக ராஜ நாகத்தை பயன்படத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அந்த பாடகரும் ராஜநாகத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.

பொதுவாக, உயிரை பாதுகாத்து கொள்ள மலைப்பாம்பின் வாயை முழுவதுமாக கட்டி விடுவார்கள். விஷ பாம்புகள் இருந்தால் அதன் பற்கலை நீக்கி விடுவார்கள்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் வரவழைக்கப்பட்ட ராஜநாகத்திற்கு பல் நீக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், இது பாடகருக்கு தெரிவிக்கப்படவும் இல்லை.

இந்த சூழலில், ராஜநாகத்துடன் மேடை ஏறிய அந்த பெண் பாடகர் முதல் பாடலை பாடி முடிக்கிறார்.

பின்னர், இரண்டாவது பாடலை பாடும்போது அந்த ராஜநாகத்தை ஒரு துணிக்குள் அடைத்துவிட்டு வருகிறார்.

ஆனால், பாம்பு வெளியே இருப்பத்தை தெரியாத அவர் பாம்பின் வாலை மிதித்து விடுகிறார். ஆக்ரோஷமாக திரும்பி அந்த ராஜநாகம் பாடகரின் தொடையில் கடித்து விடுகிறது.

பாம்பு கடித்ததன் வலியை சிறிதும் உணராத அந்த பெண் தொடர்ந்து பாடல் பாடியுள்ளார். ஆனால், இதனை கவனித்த மற்றவர்கள் வந்து பாம்பை அப்புறப்படுத்துகின்றார்.

சில வினாடிகளுக்கு பின்னர் தான் அவருக்கு திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் அவர் திடீரென மேடையிலேயே சுருண்டு விழுகிறார்.

மருத்துவனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜநாகம் மிகவும் கொடிய விஷத்தனமை உடையது. ஒரே ஒரு கடியில் வெளியாகும் விஷமானது ஒரு யானையை கூட கொன்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை