நூறு ரூபாயை தொலைத்த சோகம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.100 தொலைத்த சோகத்தில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியின் கல்யான்புரியைச் சேர்ந்தவர் 18 வயதான சிவம். இவர் கிடைக்கும் வேலையைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் பணியாற்றிய சிவத்துக்கு ரூ.300 சம்பளமாகக் கிடைத்துள்ளது.
இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் ரூ.100 கையில் இருந்து எங்கேயோ தொலைத்துவிட்டார்.
மனம் உடைந்து போன சிவம், அதையே நினைத்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அன்றிரவு வீட்டில் உள்ள மின் விரிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் அவருக்குக் கிடைத்த பணத்தை அவர் தொலைத்துவிட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிய வந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
