வகுப்பிற்கு நாயை அழைத்து வந்த ஆசிரியர்: அதிரடியாக பணியிலிருந்து நீக்கிய பள்ளி நிர்வாகம்

COOL SWISS  COOL SWISS
வகுப்பிற்கு நாயை அழைத்து வந்த ஆசிரியர்: அதிரடியாக பணியிலிருந்து நீக்கிய பள்ளி நிர்வாகம்

சுவிஸின் பேர்ன் நகரில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் பெண் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டில் கண் தெரியாத நாய் ஒன்று வளர்ந்து வருகிறது. மேலும், நாயிற்கு கண் தெரியாத காரணத்தினால் வீட்டில் பராமரிக்க யாரும் இல்லாததால் அந்த நாயை பள்ளிக்கு அடிக்கடி அழைத்து வந்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், நாயை பராமரித்துக்கொள்ள பள்ளியிலேயே ஒருவரை அந்த ஆசிரியர் நியமித்துள்ளார். ஆனால், ஆசிரியரின் இந்த நடவடிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கு நாயை அழைத்து வரவேண்டாம் என பள்ளி நிர்வாகம் பலமுறை ஆசிரியரை வலியுறுத்தியும் அவர் அதனை பின்பற்றவில்லை.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், ‘பள்ளி நிர்வாக விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆசிரியரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளதாகவும், இந்த கல்வி ஆண்டிற்கு பிறகு அவர் பணியை தொடர மாட்டார்’ என உறுதியளித்துள்ளனர்.

எனினும், பள்ளி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிராக ஆசிரியர் வழக்கு தொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை