மீண்டும் மலர்ந்த காதல்: இரவு விருந்தில் கலந்து கொண்ட கோஹ்லி- அனுஷ்கா
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
இருப்பினும் அனுஷ்கா சர்மா கிரிக்கெட் போட்டியில் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்.
அதேபோல் கோஹ்லியும் உடைந்த போன காதலை மீண்டும் ஒட்ட வைக்க அனுஷ்காவின் சகோதரர் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் அனுஷ்கா, கோஹ்லியுடன் சேரும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டார்.
இருப்பினும் காதலி அனுஷ்கா சர்மாவை சமூகவலைதளங்களில் கேலி செய்தவர்களை விளாசித் தள்ளினார் விராட் கோஹ்லி.
இந்த நிலையில் அனுஷ்கா சர்மா- விராட் கோஹ்லி மீண்டும் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் மும்பையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அனுஷ்கா சர்மா கறுப்பு நிற உடையும், கோஹ்லி சாதாரண ஒரு டி-சர்ட் அணிந்த படி இரவு ஹொட்டலில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தற்போது கோஹ்லி ஐபிஎல் போட்டியிலும், அனுஷ்கா சர்மா சுல்தான் படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
