அத்தப்பத்து, சனத் ஜெயசூரியா கூட சொதப்பியவர்கள் தான்: திரிமன்னேவுக்கு அரவிந்த டி சில்வா ஆதரவு
டி20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியை அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக் குழு தெரிவு செய்தது. இதில் முன்னதாக உள்ள இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மல், திரிமன்னேவுக்கு புதிய அணியில் இடமளிக்கப்பட்டது. ஆனால் திரிமன்னே (6,5,3,0) 4 இன்னிங்களில் 14 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.
இதனால் புதிய தெரிவுக் குழு தேர்வு செய்த அணி டி20 உலகக்கிண்ண தொடருக்கு சரியில்லாத ஒன்று என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அணியின் நலனுக்காகவே சில முடிவுகள் எடுக்கப்பட்டது. தோல்விக்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அரவிந்த டி சில்வா கூறியுள்ளார்.
மேலும், தொடர் முழுவதும் சொதப்பிய திரிமன்னேவுக்கு ஆதரவாகவும் அவர் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தற்போது உள்ள நிலைமையில் திரிமன்னே மிகச்சிறந்த வீரர். அவர் இலங்கை அணிக்கு அவசியமான ஒருவர்.
அத்தப்பத்து 6 டக்-அவுட்டுக்கு பிறகும் அணியில் இருந்தார். நடுவரிசையில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த சனத் ஜெயசூரியாக கூட அணியில் நீடித்து சாதனை படைத்தார்” என்று கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
