திருமணத்திற்காக விபரீத அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளைஞர்!
தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் செய்துகொள்வதற்காக இளைஞர் ஒருவர் விபரீத அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 24 வயதான நிகில் ரெட்டி. ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு தாம் குள்ளமாக இருப்பதாக கவலையில் இருந்து வந்தார்.
இதனாலேயே இவருக்கு பெண் கிடைக்கவில்லை எனவும் இவர் பெரிதும் கவலைப்பட்டு வந்துள்ளார்.
இதனால் தனது உயரத்தை அதிகரிக்கும் நோக்கில் அறுவை சிகிச்சை செய்ய அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் மகனை தொடர்ந்து 3 நாட்களாக காணாத பெற்றோர் ஐதராபாத் பொலிசாரிடம் மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே நிகில் ரெட்டியின் அலைப்பேசி சிக்னலை வைத்து அவர் மருத்துவமனையில் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இத்தகவலை அறிந்த நிகிலின் பெற்றோர் அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் இருந்த அவரை பார்த்து மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், நிகில் சிகிச்சை தொடர்பாக கடந்த 6 மாதகாலமாக தனியாகவே வந்து மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வரும் நிகில் 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
