சென்னை சூப்பர் கிங்ஸை போல வருமா.. நீங்காத நினைவுகளுடன் பிராவோ (வீடியோ இணைப்பு)
சென்னையில் அல்டிமேட் விளையாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ”கண்டிப்பாக டோனியின் தலைமையை நான் அதிகமாக மிஸ் பண்ணுவேன். அவர் உலகின் தலைச்சிறந்த தலைவர்களின் ஒருவர்.
தற்போது ரெய்னாவிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். சென்னை அணியில் இருந்த முக்கிய வீரர்கள் தற்போது குஜராத் அணியில் உள்ளனர்.
எங்களுக்கு ஒரு போட்டியை எப்படி வெல்லவது என்று தெரியும். ஒரு காலத்தில் சென்னை அணியை வீழ்த்த வேண்டும் என்று அனைத்து அணிகளும் விரும்பும். குஜராத் அணியும் அது போல் உருவாகும் என்று நம்புகிறேன்.
அதேசமயம் சென்னை அணிக்கு மாற்று அணி என்பதே கிடையாது. நாங்கள் சென்னை அணியில் இருந்து ஐந்து வீரர்களை கொண்டுள்ளோம். எனவே சென்னை ரசிகர்கள் குஜராத் லயன்ஸ் அணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
மேலும், டி20 உலகக்கிண்ணத்தின் அரையிறுதியில் நாங்கள் இந்தியாவை வென்ற சமயத்திலும் ரசிகர்கள் மைதானத்தில் எழுந்து நின்று எங்களுக்கு தெரிவித்த ஆதரவை என்றும் மறக்க முடியாது” என்று கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
