என்னை ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திவிட்டார் கோஹ்லி: ஜான்சன் (வீடியோ இணைப்பு)
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது மிட்செல் ஜான்சன், கோஹ்லியின் 2015ம் ஆண்டு உலகக்கிண்ண செயல்பாட்டை கிண்டலடித்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அதிரடி காட்டிய கோஹ்லி 51 பந்தில் 82 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.
ஆனால் தான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று குறிப்பிட்ட மிட்செல் ஜான்சன், கோஹ்லிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், 2014ம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்டில் நடந்த மோதல் குறித்து மிட்செல் ஜான்சன் கூறுகையில், ”அந்த டெஸ்ட் போட்டியில் நான் கோஹ்லியை ஆட்டமிழக்க செய்ய முயற்சித்த போது நான் எறிந்த பந்து அவர் மீது பட்டது.
ஆனால் அப்போது கோஹ்லி என்னை போல் நடந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக அன்று இரவு நடந்த செய்தியாளர் சந்திப்பில் ’என்னை ஒரு வீரராகவே மதிக்கவில்லை’ என்று கூறினார். இது எனக்கு கோபத்தை உண்டாக்கியது.
அவர் அவுஸ்திரேலிய வீரர்கள் போல் களத்தில் போராடும் குணத்தை கொண்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் அவரை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
9வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி வருகிற 9ம் திகதி தொடங்கி மே 29ம் திகதி வரை நடக்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
