ஆறு மணி நேரம் மட்டும் கோடீஸ்வரராக இருந்த நபர்: நடந்தது என்ன?

COOL SWISS  COOL SWISS
ஆறு மணி நேரம் மட்டும் கோடீஸ்வரராக இருந்த நபர்: நடந்தது என்ன?

சுவிட்சர்லாந்தின் பஸெல் மாகாணத்தில் வாகன ஓட்டி ஒருவர் கடந்த முதல் தேதி அன்று Coop வங்கி ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது தனது வங்கி கணக்கில் மீதமிருக்கும் தொகையை கணக்கு பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அவரது வங்கி கணக்கில் மொத்தமாக 20,500,000 பிராங்க் தொகை இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமது நிறுவனம் ஏதும் அறிவிக்கப்படாத சலுகை எதையும் வழங்கியுள்ளதா என கேட்டு தமது வியப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஓட்டுனர் Goran Teofilovic உடனடியாக அந்த வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வங்கி அதிகாரிகளும் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் திட்டமல்ல என்றும் இதுபோன்ற சில பிழைகள் நேர்ந்துவிடுவதுண்டு எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

இதே அதிர்ஷ்டத்தை அவர் லோட்டரியிலும் முயற்சிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக Teofilovic லோட்டரி எடுத்து வருகிறார், ஒரு முறை கூட வெற்றி எண்கள் அவருக்கு சிக்கவில்லை.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து Coop வங்கி விளக்கமளித்துள்ளது. வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதாக காட்டியது தொழில்நுட்ப பிழை எனவும், 6 மணி நேரத்தில் அது சரி செய்யப்பட்டது எனவும் அந்த வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட நபருக்கு அந்த தொகையில் இருந்து பணபரிவர்த்தனை நடத்த முடியவில்லை என்பதும், அவர் அதற்கு முயற்சித்த போது மீண்டும் முயற்சிக்க கேட்டிருந்ததாகவும் Teofilovic தெரிவித்துள்ளார்.

மூலக்கதை