“அன்பான நபர்” 150 பேரின் உயிரை பறித்த விமானிக்கு நினைவஞ்சலி! கொந்தளித்த மக்கள்

  NEWSONEWS
“அன்பான நபர்” 150 பேரின் உயிரை பறித்த விமானிக்கு நினைவஞ்சலி! கொந்தளித்த மக்கள்

ஜேர்மனியின் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியான இந்த நினைவஞ்சலி குறிப்பு தான் அங்குள்ள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பிரான்ஸ் ஆல்ப்ஸ் அருகே 150 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று திடீரென்று அப்பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் விமானி உள்ளிட்ட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தொடர்புடைய விமானியின் குடும்பத்தினர் தான் இந்த ஆண்டு நினைவஞ்சலி குறிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில், இந்த துயரச்சம்பவத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்,

கடந்த ஓராண்டாய் தங்களது துயரத்தில் பங்கேற்று ஆறுதல் தெரிவித்தவர்களை இந்த தருணத்தில் நினைவில் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், அன்பான, மதிப்புமிக்க நபரை தாங்கள் இழந்துள்ளதாகவும் விமானி Lubitz குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நினைவஞ்சலி விளம்பரம், விமான விபத்தில் உற்றார் உறவினர்களை இழந்த குடும்பத்தினருக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது.

தங்களது குடும்ப உறுப்பினர்கள் பலரை தற்போது கல்லறை தோட்டத்தில்தான் எங்களால் சந்திக்க முடிகிறது,

ஆனால் இவ்விபத்தினை ஏற்படுத்திய அந்த விமானி மதிப்புமிக்க நபராக மாறிவிட்டாரா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே விமானியின் குடும்பத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்களது குழந்தைகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பெற்றோருக்கு உரிமை இல்லையா எனவும் வினவியுள்ளனர்.

மூலக்கதை