பெண் ஆசிரியருடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய சிறுவர்கள்: சர்ச்சையை கிளப்பிய பள்ளியின் முடிவு
சுவிட்சர்லாந்தின் பெஸல் மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்று எடுத்துள்ள முடிவு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Therwil பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வரும் இஸ்லாமிய மாணவர்கள் இருவர் பெண் ஆசிரியருடன் கைலுகுக்குவதறு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அது தங்களது மத நம்பிக்கைக்கு எதிரான செயல் எனவும், தவிற்க முடியாத சூழலில் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் கைகுலுக்குவதில் தவறில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்தின் முடிவுக்காக கொண்டு செல்லப்பட்டதில், இஸ்லாமிய மாணவர்கள் பெண் ஆசிரியருடன் கைகுலுக்க தேவை இல்லை என அறிவித்துள்ளது.
ஆனால், பள்ளியின் கொள்கை முடிவில் தாங்கள் தலையிட முடியாது என தெரிவித்துள்ள உள்ளூர் ஆட்சிமன்றம், சட்டதிட்டங்களை வகுப்பது பள்ளியின் முடிவு என்றது.
இதனிடையே இந்த விவகாரத்தில் அறுதியான முடிவை எடுக்க வேண்டும் எனவும், அது நடைமுறைக்கு ஏற்றதாக அமைய வேண்டும் எனவும் மாகாண கல்வித்துறை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆணும் பெண்ணும் கைகுலுக்குவது இறையியல் ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்றே எனவும், பல இஸ்லாமிய நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதாகவும்,
சுவிஸ் நாட்டில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்தை பெருதுபடுத்த வேண்டாம் எனவும், பிரச்சனையை உருவாக்கும் அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
