தன்னை தானே அலமாரியில் அடைத்துகொண்ட நபரை மீட்டு கைது செய்த பொலிசார் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
தன்னை தானே அலமாரியில் அடைத்துகொண்ட நபரை மீட்டு கைது செய்த பொலிசார் (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள டெண்டினொங் (Dandenong) மார்கெட் அருகில் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியை வைத்துகொண்டு பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டிருந்தார்.

இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். பின்னர் அந்த நபர் அருகில் உள்ள தீயணைப்பு குழாய் அலமாரிக்குள் சென்று உள்பக்கமாக தாளிட்டுகொண்டார்

இதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த பொலிசார் கயிறு மூலம் தீயணைப்பு குழாயின் அலமாரியின் கதவை திறந்தனர்.

பின்னர் தங்களிடமிருந்த மிளகாய் ஸ்ப்ரேயை அவர் மீது தெளித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்ததும் பொலிசார் அவரை மீட்டு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருகில் உள்ள ஆல்ஃப்ரெட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மீது எந்த வழக்கும் பதிவி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மூலக்கதை