புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாலியல் தாக்குதல் விவகாரம்: சிக்கிய முதல் குற்றவாளி!

NEWSONEWS  NEWSONEWS
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாலியல் தாக்குதல் விவகாரம்: சிக்கிய முதல் குற்றவாளி!

ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான Cologne நகரில் புத்தாண்டு தினத்திற்கு முந்திய இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்குள்ள ரயில் நிலையத்திற்கு முன்பாக கூடியுள்ளனர்.

அப்போது, இந்த கூட்டத்திற்குள் நுழைந்த சுமார் 1,000 நபர்கள் அடங்கிய குழுவினர் அங்குள்ள பெண்கள் மீது பாலியல் வன்முறையை நடத்தியுள்ளனர்.

இதில், வன்முறையில் ஈடுபட்டவர்களில் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் அவர்களை நாடுகடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இதுதொடர்பான விசாரணை நடைபெற்றும் வருகின்ற நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு முதல் குற்றவாளி இக்குற்றத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.

அல்ஜீரிய நாட்டை சேர்ந்த இந்நபரின் வயது 26 ஆகும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொலிசார் நடத்திய என்கவுன்டரின் போது, கிடைத்த கைப்பேசி மூலம் இந்நபரின் குற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை