சுவிஸில் கொள்ளையடித்தற்காக குற்றவாளிகள் கூறிய காரணம்: அதிர்ச்சியில் உறைந்த பொலிசார்

COOL SWISS  COOL SWISS
சுவிஸில் கொள்ளையடித்தற்காக குற்றவாளிகள் கூறிய காரணம்: அதிர்ச்சியில் உறைந்த பொலிசார்

சுவிஸின் சூரிச் நகரில் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பல்வேறு கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

முகமூடி மற்றும் ஆயுதம் ஏந்திய அந்த இரு கொள்ளையர்கள் அடுத்தடுத்து 5 கொள்ளைகளை நிகழ்த்தி பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

இரு கொள்ளையர்களில் 18 வயதான கொள்ளையனை பொலிசார் கொள்ளை நடந்த இடத்திலேயே கைது செய்துனர்.

அப்போது அவரிடமிருந்த கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிராங்குகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கொள்ளையன் மூலமாக வலை விரித்த பொலிசார் 22 வயதான எரித்திரியா நாட்டை சேர்ந்த கொள்ளையனையும் பொலிசார் கைது செய்தனர்.

இருவரிடமும் பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று கொள்ளைக்கான காரணத்தை பொலிசாரிடம் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதாவது, கொள்ளையடிக்கும் பணத்தை பயன்படுத்தி பாலியல் தொழிலாளிகளுடன் உல்லாசமாக இருக்கவும், அவர்களுடன் சேர்ந்து போதை மருந்துக்களை எடுத்துக்கொள்ளவும் மட்டுமே இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மூலக்கதை