நள்ளிரவில் பெண்ணை கற்பழிக்க முயன்ற அகதி: கடவுள் போல் காப்பாற்றிய ’டாக்ஸி’ ஓட்டுனர்

COOL SWISS  COOL SWISS
நள்ளிரவில் பெண்ணை கற்பழிக்க முயன்ற அகதி: கடவுள் போல் காப்பாற்றிய ’டாக்ஸி’ ஓட்டுனர்

சுவிஸின் சூரிச் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பேருந்து நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த டாக்ஸிகள் நிறுத்துமிடத்தில் ஓட்டுனர்கள் கூடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது, Shpejtim Zhegrova என்ற பெயருடைய ஓட்டுனர் எதேச்சையாக பார்த்தபோது தூரத்தில் ஒரு பெண் தரையில் படுத்திருக்க அவரை நபர் ஒருவர் கற்பழிக்க முயன்றுக்கொண்டு இருந்துள்ளார்.

இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரும் அவரது நண்பர்களும் காப்பாற்ற விரைந்து ஓடியுள்ளனர்.

இவர்களை பார்த்த அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி முயன்றுள்ளார். நண்பர்கள் பெண்ணை பாதுகாத்துக்கொள்ள ஓட்டுனர் அந்த மர்ம நபரை விரட்டிக்கொண்டு சென்றுள்ளார். ஆனால், அவர் தப்பிவிடுகிறார்.

எனினும், முயற்சியை கைவிடாத ஓட்டுனர் உடனடியாக இந்த சம்பத்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ரோந்து பொலிசாரை உஷார் படுத்திய பிறகு சில நிமிடங்களுக்கு மற்றொரு பகுதியில் அந்த மர்ம நபரை பொலிசார் கைது செய்தனர்.

25 வயதான அந்த பெண்மணியை ஓட்டுனர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவர் பேசியபோது, ‘சாலையில் நின்றுருந்த என்னிடம் அந்த நபர் முதலில் வந்து ஒரு சிகரெட் கேட்டார்.

நான் அவரிடம் சிகரெட் கொடுத்த விநாடி என்னை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சித்தார்’ என கண்ணீருடன் பேசியுள்ளார்.

நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் 18 வயதான எரித்திரியா நாட்டை சேர்ந்தவர் என்றும், சுவிஸில் புகலிடம் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மூலக்கதை