பேஸ்புக்கில் பதிவேற்ற ‘செல்பி’ வீடியோ எடுத்த நபர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
பேஸ்புக்கில் பதிவேற்ற ‘செல்பி’ வீடியோ எடுத்த நபர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)

சிகாகோவில் உள்ள West Inglewood என்ற பகுதியில் 31 வயதான கருப்பின நபர் தனது மொபைலில் உள்ள பேஸ்புக் வீடியோ வசதி மூலம் தன்னை தானே வீடியோ எடுத்துக்கொண்டு இருந்துள்ளார்.

நபர் நின்றிருந்த பகுதியின் சிறப்பு அம்சங்களை சிரித்தவாறு சொல்லிக்கொண்டு இருந்த நேரத்தில் திடீரென இடது பக்கமாக திரும்பி பார்க்கிறார்.

அப்போது, அவரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட அவர் சுருண்டு கீழே விழுகிறார்.

ஆனால், நபர் கீழே விழுந்தாலும் அவர் கையில் இருந்த மொபைல் போன் வானத்தை நோக்கி இருந்ததால், துப்பாக்கியால் சுட்ட நபர் சரியாக அந்த இடத்தில் நின்று மீண்டும் மற்றவர்களை நோக்கி சரமாரியாக சுடுகிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு சில வினாடிகள் வீடியோ அமைதியாக இருக்கிறது. பின்னர் மீண்டு திரும்பி வந்த அந்த மர்ம நபர் கீழே கிடந்த நபரை தாக்கியுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர், அந்த நபர் தப்பிவிட அங்குள்ள பொதுமக்கள் விரைந்து வந்து கீழே கிடந்த நபரை தூக்கி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், அவர் பிழைத்தாரா இல்லையா மற்றும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

மூலக்கதை