சூட்டை கிளப்பும் மின்னஞ்சல் விவகாரம்: ஹிலாரி கிளிண்டனை நெருங்கும் எப்பிஐ!

NEWSONEWS  NEWSONEWS
சூட்டை கிளப்பும் மின்னஞ்சல் விவகாரம்: ஹிலாரி கிளிண்டனை நெருங்கும் எப்பிஐ!

மின்னஞ்சல் ஊழல் தொடர்பான விசாரணையை இந்த வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர இருப்பதால் எப்.பி.ஐ. அதிகாரிகள் ஹிலாரி கிளிண்டனை விசாரிக்க கூடும் என கூறப்படுகிறது.

விசாரணை தற்போது ஆபத்து கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விசாரணை அதிகாரிகள் ஹிலாரி அனுப்பியதாக கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் பரிசோதித்து முடித்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனின் உயர்மட்ட உதவியாளர்களை விசாரிக்க எப்.பி.ஐ முனைப்பு காட்டி வருகிறது, கூடவே ஹிலாரியையும் விசாரிக்க கூடும் என தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணைகள் முடிவுக்கு வருவதற்கு முன்னர் அல்லது அதன் பின்னர், எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் Comey குற்றவியல் நடவடிக்கை குறித்து அட்டர்னி ஜெனரல் லொரிட்டா லிஞ்சிடம் தமது பரிந்துரைகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த விசாரணையை விரைந்து முடிக்கும் பொருட்டு 147 அதிகாரிகளை எப்.பி.ஐ. நியமித்துள்ளதாகவும்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த வழக்கினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அதன் இயக்குனர் ஜேம்ஸ் Comey விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹிலாரி கிளிண்டன அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களின் பார்வைக்கு உள் விவகாரத்துறை வெளியிட்டது.

அதில் 22 மின்னஞ்சல்கள் உயர்மட்ட ரகசியமானது என குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் ரகசியமானது எனவும் நம்பகத்தன்மை வாய்ந்தது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தன.

மூலக்கதை