நள்ளிரவில் திடீர் தீவிபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

NEWSONEWS  NEWSONEWS
நள்ளிரவில் திடீர் தீவிபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Pikangikum என்ற நகரில் 3 தலைமுறைகளை சேர்ந்த 9 பேர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்திலிருந்து தப்பிக்க முடியாத 5 வயதுடைய 3 குழந்தைகள் உள்பட 9 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

எனினும், வீட்டிற்குள் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பதை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த துயரமான சம்பவத்தை அறிந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அப்பகுதி மக்களின் துயரத்தில் தானும் பங்கேற்பதாகவும், அவர்களின் தேவைகளை உடனடியாக தீர்க்கப்படும் என கூறி இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த பகுதியில் வீடுகளின் கட்டமைப்புகள் மிகவும் மோசமாகவும், இங்கு வாழும் மக்கள் வறுமையில் வாழ்வதால் அடிக்கடி தற்கொலை நிகழ்வுகளும் நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓண்டாரியோ மாகாணத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மூலக்கதை