எனது படுக்கையறையில் யார்? ஜேர்மனியில் வினோத சம்பவம்

NEWSONEWS  NEWSONEWS
எனது படுக்கையறையில் யார்? ஜேர்மனியில் வினோத சம்பவம்

ஜேர்மனியின் Rhineland-Palatinate மாநிலத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சென்ற தம்பதியினர் அங்கு, இரவு நேரத்தை நன்றாக மது அருந்தி கொண்டாடியுள்ளனர்.

மேலும், இவர்கள் தங்களது முகத்தில் ape masks (குரங்கு முகமூடி)- யினை அணிந்துள்ளனர்.

இரவு நேரம் கழிந்து காலையில் கண்விழித்த மனைவி, தனது படுக்கையில் வேறு ஒரு நபர் இருக்கிறார் என்றும் தன்னை காப்பாற்றும்படியும் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார், மெத்தை மீது படுத்திருந்த அந்நபரை திருப்பி பார்க்கையில் அது அப்பெண்மணியின் கணவர் தான் என தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் அப்பெண்ணை சமாதானப்படுத்திவிட்டு, அங்கிருந்து பொலிசார் சென்றுள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலக்கமடைந்த பெண்மணி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று மீண்டும் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை