வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், பாதுகாப்பு அதிகரிப்பு! (வீடியோ இணைப்பு)
அமெரிக்க ஜனாதிபதியின் அலுவகலகமான வெள்ளை மாளிகை தலைநகர் வாசிங்டனில் அமைந்துள்ளது.
இந்த வெள்ளை மாளிகை வளாகத்தினுள் அமைந்துள்ள பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட்தாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் உயிரிக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பிடிபட்ட நபரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது பொதுமக்கள் பீதி அடையத்தக்க சம்பவம் இல்லை எனவும் இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியின் சில மீற்றர்கள் தொலைவில்தான் ஜனாதிபதி ஒபாமா ஈஸ்டர் விழா சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துக்கொண்டிருந்தார்.
மேலும் அந்த விழா நடைபெற்ற பகுதியில் சுமார் 35,000 பொதுமக்கள் குழுமியிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
