டி 20 போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்தியா
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி – 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இந்தப் போட்டிகள் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு மாலையில் கடுமையாக மழை பெய்ததால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மாலை 7.30 மணிக்குத் துவங்குவதாக இருந்த ஆட்டம் 8.10க்குத் துவங்கியது.
அதன் பிறகு போட்டிக்கான ஓவர்கள் குறைக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கும் 18 ஓவர்கள் வீச முடிவெடுக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்து வீச்சைத் தேர்வுசெய்தார்.
முதலில் பாட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 118 ரன்களைப் பெற்றது.
119 ரன்களை இலக்காகக் கொண்டு களம்இறங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 15.5 ஓவர்களில் 119 ரன்களை பெற்று இன்றைய போட்டியை தமதாக்கிக் கொண்டது.
விராட் கோலி 55 ரன்களை பெற்றுக்கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்தார்.
T – 20 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய 10 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
