கனடாவின் மிக ஆபத்தான பெண்மணி விடுதலை: பொதுமக்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை
இவ்வளவு மோசமான குற்றங்களை ஒரு விதவை பெண்ணால் தொடர்ந்து செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை உடைக்கும் வகையில் பல்வேறு குற்றங்களில் சிறை தண்டனை பெற்று தற்போது அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Halifax என்ற நகரில் வசித்து வருபவர் Melissa Ann Shepard(தற்போதைய வயது-80).
இளமை காலங்களில் 30-க்கும் மேற்பட்ட பண மோசடிகளை செய்த குற்றங்களுக்காக இந்த பெண்மணிக்கு 1977ம் ஆண்டு 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 1991ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர், 1992ம் ஆண்டு Gordon Stewart என்ற பெயருடைய தனது இரண்டாவது கணவனுக்கு போதை மருந்து கொடுத்து அவர் மீது கார் ஏற்றி கொலை செய்த குற்றத்திற்காக 6 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், இவருக்கு முறையாக பரோல் கிடைத்ததால் 1994ம் ஆண்டு சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதற்கு அடுத்ததாக, 2002ம் ஆண்டு இந்த பெண்மணியின் 3-வது கணவரான Robert Friedrich என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால், இந்த பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் நீதிமன்றம் எடுக்கவில்லை.
பின்னர், இணையத்தளம் மூலமாக அமெரிக்காவை சேர்ந்த Alex Strategos(தற்போதைய வயது -84) என்பவருடன் தொடர் ஏற்பட்டு கனடாவை விட்டு வெளியேறி புளோரிடாவில் அந்த நபருடன் குடியேறினார்.
ஆனால், சில வாரங்களில் அந்த நபரின் தேனீர் மற்றும் ஐஸ் கிரீம்களில் போதை மருந்துக்களை கொடுத்துள்ளார். அதே சமயம், அவரிடமிருந்து சுமார் 20,000 டொலர் பணத்தையும் திருடியுள்ளார்.
இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதும் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை அனுபவித்த பிறகு கனடா நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஆனாலும், இவர் தனது குற்றச்செயல்களை தொடர்ந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த Fred Weeks என்ற நபருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவருக்கும் போதை மருந்தை தெரியாமல் கொடுத்து வந்துள்ளார்.
இந்த குற்றங்களுக்காக இந்த விதவை பெண்மணிக்கு கனடா நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு 2 வருடங்கள், 9 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் சிறை தண்டனை விதித்தது.
இந்த சிறை தண்டனையை முழுவதுமாக அனுபவித்த அந்த பெண்மணியை நேற்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
தற்போது Halifax நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் தான் இந்த ஆபத்தான பெண்மணி வசித்து வருகிறார்.
இந்த பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு பொலிசார் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
‘இணையத்தளம் மூலமாக தனிமையில் இருக்கும் முதியவர்களை இந்த பெண்மணி தொடர்புக்கொண்டு நட்பு ஏற்படுத்திக்கொள்ள முயன்றால் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், தற்போது விடுதலை ஆகியுள்ள அந்த கொலைகார மூதாட்டிக்கும் பொலிசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதாவது, ‘அவருடைய தோற்றத்தை எக்காரணம் கொண்டும் மாற்றிக்கொள்ள கூடாது. இணையத்தளத்தை பயன்படுத்தக்கூடாது. மற்றவர்களின் விருப்பம் இன்றி அவர்களிடம் பேச்சு கொடுக்க கூடாது’ உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், இத்தனை குற்றங்களை செய்த ஒரு பெண்ணை விடுதலை செய்த நீதிமன்றத்திற்கு இதே பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
’’இவ்வளவு குற்றங்களை செய்த பெண்ணை விடுதலை செய்திருக்க கூடாது. ஆனால், நீதிபதி எந்த காரணத்தினால் இப்படி செய்தார் என தெரியவில்லை.
எனினும், இப்பகுதியில் வசிக்கும் அப்பாவி மக்களுக்கு இந்த கொலைகார மூதாட்டியால் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதையே விரும்புவதாக’ மூதாட்டியால் பாதிக்கப்பட்ட முன்னாள் காதலரான Alex Strategos கவலை தெரிவித்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
