பெற்ற தாய் மீது கார் ஏற்றி கொன்ற மகள்: காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கமெரா (வீடியோ இணைப்பு)
ரொறொன்ரோ நகரில் எலினோர் கேம்பெல்(65) என்ற தாயார் மீச்செல் கேம்பெல்(43) என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இருவருக்கும் குடும்ப விவகாரம் தொடர்பாக் பிரச்சனைகள் எழுந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இருவரும் காரில் அருகில் உள்ள Pelmo Park என்ற பகுதிக்கு சென்று அங்குள்ள தேனீர் கடையில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடியுள்ளனர்.
இந்தச் சூழலில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பின்னர் இருவரும் எழுந்து காரை நோக்கி சென்றுள்ளனர்.
ஆனால், தாயார் காரில் ஏற மறுத்துவிட்டு தனியாக சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகள் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று தாயார் மீது மோதிவிட்டு பறந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தாயார் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் பெற்று வந்த பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தொடக்கத்தில் இது ஒரு விபத்தாக இருக்குமா என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும், பொலிசார் இதனை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், சாலையில் இருந்த கண்காணிப்பு கமெராவை பொலிசார் சோதனை செய்தபோது, அதில் கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு மிகச்சாதாரணமாக கடந்து சென்றதை கண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதன் விளைவாக, வீட்டில் இருந்த மீச்செல்லை கண்டுபிடித்த பொலிசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், விசாரணைக்கு பிறகு மீச்செல் மீது நேற்று பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
