’’அமெரிக்காவை நீங்களே ஆட்சி செய்யுங்கள்’’: கனேடிய பிரதமரிடம் கெஞ்சிய அமெரிக்க வாலிபர்கள் (வீடியோ இணைப்பு)
கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நியூயோர்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துக்கொண்டார்.
அப்போது, நிகழ்ச்சியின் இறுதியில் இரண்டு அமெரிக்க வாலிபர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில் மண்டியிட்டு ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
அதில், ‘எங்கள் நாட்டில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுபவர்களில் ஒருவர் கூட தகுதியானவர்கள் இல்லை. அனைவரும் மோசமானவர்கள்…..பயங்கரமானவர்கள்.
இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்ற நீங்கள்(கனேடிய பிரதமர்) அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட வேண்டும்’. என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
வாலிபர்களின் கோரிக்கையால் ஒரு கணம் அதிர்ந்துபோன பிரதமர் பின்னர் சிரித்துக்கொண்டு அவர்களுக்கு பதிலளித்துள்ளார்.
‘நான் ஏற்கனவே கனடா நாட்டிற்கு பிரதமராக பணியாற்றி வருகிறேன் என்பது உங்கள் இருவருக்கும் தெரியும் என நினைக்கிறேன். எனக்கு அந்த பணியை மிகவும் பிடித்துள்ளது’ என கூறி வாலிபர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க வாலிபர்களின் இந்த கோரிக்கை தொடர்பான வீடியோ நேற்று முன் தினம் வெளியாகி இணையத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
This just happened to @JustinTrudeau in a NYC cafe: @cnn @ABC @HuffingtonPost @FoxNews pic.twitter.com/BuceWMnGge
— Stephen Ward (@_stephenward) 17 March 2016
Justin Trudeau dans un resto de Manhattan. Ces 2 Américains le supplient de se lancer dans la course présidentielle! pic.twitter.com/QgrrEdVaIj




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
