பாரீஸ் தாக்குதலில் கைதான தீவிரவாதி செய்த முதல் குற்றம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

NEWSONEWS  NEWSONEWS
பாரீஸ் தாக்குதலில் கைதான தீவிரவாதி செய்த முதல் குற்றம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நடத்திய தீவிரவாத தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்ட சம்பத்தில் Salah Abdeslam என்ற முக்கிய குற்றவாளி கடந்த வெள்ளிக்கிழமை பிரஸ்சல்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டான்.

தற்போது ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள இவரது பின்னணி தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

26 வயதான சாலா, 1989ம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி பிரஸ்சல்ஸில் பிறந்தவர். இவருக்கு Mohammad மற்றும் Brahim என இரு மூத்த சகோதரர்கள் உள்ளனர்.

சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட சாலா, தனக்கு 18 வயதானபோது ஒரு பெண்ணை காதல் செய்து பின்னர் பிரிந்துள்ளனர்.

உள்ளூரில் பல குற்றங்களில் ஈடுப்பட்டு வந்த தனது சகோதரரான பிராஹிமுடன் இணைந்து இவரும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

முதன் முதலாக திருட்டு குற்றத்தில் ஈடுப்பட்டு, பின்னர் போதை பொருள் கடத்துவது, ஆள் மாறாட்டம் மற்றும் பணமோசடி என பல குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

சில குற்றங்களுக்காக 2010 முதல் 2011 வரை சிறை தண்டனையும் பெற்றவர் ஆவார்.

இவ்வாறு பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டு வந்து பின்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சேர்ந்து பல்வேறு தாக்குதல்களில் ஈடுப்பட்டுள்ளது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாரீஸில் தாக்குதல் நடத்தியுள்ளதால், அந்நாட்டிற்கு செல்வதை அவர் விரும்பவில்லை என தெரிகிறது.

வழக்கறிஞர் ஒருவரை நியமித்துள்ள சாலா, இறுதி வரை பிரஸ்சல்ஸ் நகரிலேயே இருக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை