பேராசிரியர் இராமு.மணிவண்ணன் ஒருங்கிணைப்பில் உதயமாகும் தமிழ்நாடு தேசிய இயக்கம்

TAMIL CNN  TAMIL CNN
பேராசிரியர் இராமு.மணிவண்ணன் ஒருங்கிணைப்பில் உதயமாகும் தமிழ்நாடு தேசிய இயக்கம்

தலைவனைத் தேடாதே தலைவனாக உருவாகு என்ற சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் இலட்சியத்தோடு சென்னை பல்கலைக்கழக சிரேஸ்ட அரசியல்துறை பேராசிரியரும் தமிழ்தேசிய உணர்வாளருமாகிய இராமு.மணிவண்ணன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு முற்போக்கு சிந்தனைகொண்ட இளைஞர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், சமூகஆர்வலர்கள் பலர் ஒன்றிணைந்து 13-03-2016 அன்று தமிழ்நாடு தேசிய இயக்கம் என்ற பெயரிலே புதிய அமைப்பொன்று தமிழ்நாட்டில் இன்று உதயமாகிறது.

பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு சமூக பிரச்சனைகளை முன்நிலைப்படுத்தி பல்வேறு தரப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றியவர்.

குறிப்பாக பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் அடிப்படை உரிமைகளிற்காக குரல்கொடுத்து வருபவர். இதனால் இவரை முன்நிலைப்படுத்தி உருவாக்கப்படும் மேற்படி இயக்கத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூகப் பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பலமான ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது.

ஐனநாயகத்தை காக்க அரசியல் செய்வோம். அரசியலை மீட்க அறப்போர் புரிவோம்.

சாதிகளை ஒழிக்க தேசியம் படைப்போம். என்ற பல்வேறு இலக்குகளை முன்வைத்து இவ்அமைப்பு தோற்றம் பெற உள்ளதாக சென்னையின் பல இடங்களிலே ஒட்டப்பட்ட விளம்பரங்களில் காணக்கூடியதாக இருந்தது.

பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்திலே அரசியல் அறிவியல் துறையின் பிரிவு தலைவராக பதவிவகித்தவர்.

கடந்த வருடம் தமிழகத்திலே மதுவிலக்கு போராட்டத்திலே பங்கெடுத்த சென்னை பல்கலைக் கழக மாணவர்களின் விபரங்களை அரசுக்கு வழங்க மறுத்ததோடு மாணவர்களின் போரட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டார் என்ற காரணத்திற்காகவே அரசால் திட்டமிட்டு இவரின் துறைசார் பதவி பறிக்கப்பட்டதாக தெருவித்து இவருக்கு ஆதரவாக மாணவர்களும் இளைஞர்களும் தமிழ்தேசிய உணர்வாளரும் பொதுமக்களும் எனப் பலரும் வீதியில் இறங்கி போரட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலே சட்டமன்ற தேர்தல் இடம்பெற இருக்கின்ற தற்போதய பரபரப்பான சூழலிலே பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்களை முதன்மைப்படுத்தி சமூக இயக்கம் ஒன்று எழுச்சிபெறுவது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நீண்டகாலமாக குரல்கொடுத்துவரும் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழ்மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் பல்வேறு தரப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றி வருகின்றார்.

சிறிலங்காவிலே வரலாற்றுரீதியாக காலம் காலமாக தமிழர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதை பல்வேறு வராலாற்று ஆதாரங்கள் புள்ளிவிபரங்கள் சாட்சியங்களுடன் 900 பக்கங்களை கொண்ட மாபெரும் வரலாற்று ஆவண நூலை ஆங்கிலத்திலே sri lanka: hiding the elephant என்ற பெயரில் இவர் வெளியிட்ட நூல் உலகளவில் மிகப்பெரும் ஆவணமாக கருதப்படுவதோடு இன்நூலின் அறிமுகவிழாக்களும் சர்வதேசநாடுகளில் இடம்பெற்றது.

இவரின் இத்தகய பணிகள் காரணமாக உலகத்தமிழர்கள் மத்தியில் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். இவரின் ஒருங்கிணைப்பில் உருவாகும் தமிழ்நாடு தேசிய இயக்கமானது ஈழத்தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்திற்கு நிச்சயம் கைகொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

மூலக்கதை