கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர்: பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள்

NEWSONEWS  NEWSONEWS
கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர்: பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள்

ரொறொன்ரோ மாகாணத்தில் வசித்து வந்த துசாந்த் அரியநாயகம் என்ற 21 வயதான இலங்கை தமிழரை கடந்த ஞாயிற்றுக் கிழமை(மார்ச் 13) முதல் காணவில்லை என பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வாலிபரை இறுதியாக Danforth Road மற்றும் Brimley Road பகுதியில் ஞாயிறு இரவு 10 மணியளவில் பார்த்துள்ளனர். இதற்கு பின்னர், வாலிபருக்கு என்ன ஆயிற்று எங்கு சென்றுள்ளார் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.

மெலிதான உடல்வாகு, தாடி மற்றும் மீசையுடன் இந்த வாலிபர் தோற்றமளிப்பார். காணாமல் போனபோது, கருப்பு நிற அடிடாஸ் காலனிகள் மற்றும் மேலாடைகள் அணிந்துள்ளார்.

இந்த வாலிபர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை 416-222-TIPS (8477) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், www.222tips.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மூலக்கதை