மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்ய நீதிபதி அனுமதி: கனடா வரலாற்றில் முதல் நிகழ்வு (வீடியோ இணைப்பு)

NEWSONEWS  NEWSONEWS
மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்ய நீதிபதி அனுமதி: கனடா வரலாற்றில் முதல் நிகழ்வு (வீடியோ இணைப்பு)

மனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் நகரில் பெயர் வெளியிடப்படாத நோயாளி ஒருவர் கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நபருக்கு ஏற்பட்டுள்ள நோயை குணப்படுத்த முடியாது என்பதால், மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இவரது கோரிக்கையை மருத்துவர்கள் நிராகரித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நோயாளியின் உடல்நிலை அவர் அனுபவிக்கும் வேதனை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு மனிடோபா மாகாணத்திலேயே முதன் முறையாக மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்ள கடந்த செவ்வாய் கிழமை நீதிபதி ரகசிய அனுமதி அளித்துள்ளார்.

அதாவது, நீதிபதியின் இந்த ரகசிய அனுமதியின் மூலம், நோயாளியின் பெயர், வயது, பாலினம், அவருக்குள்ள நோயின் பெயர், இவருக்கு உதவி செய்யும் மருத்துவர்களின் பெயர்கள் என எந்த தகவலையும் வெளியிடக்கூடாது.

நீதிபதியின் உத்தரவு குறித்து நோயாளியின் வழக்கறிஞரான ஜோன் மேயர்ஸ் பேசியபோது, ‘தற்கொலை முடிவு எடுத்துள்ள அந்த நோயாளிக்கு 2 கடுமையான நோய்கள் ஏற்பட்டுள்ளது.

முதல் நோயிக்கு சிகிச்சை இல்லை. குணப்படுத்தவும் முடியாது. இரண்டாவது நோயின் வலியானது தாங்கிக்கொள்ள முடியாத அளவில் இருப்பதால் தான் அவர் தற்போது மருத்துவர்களின் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

நோயாளியின் விருப்பத்திற்கு இணங்க நீதிபதியும் அதற்கான அனுமதியை அளித்துவிட்டார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கனடா முழுவதும் 4 நோயாளிகள் மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்ள நீதிபதியிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

எதிர்வரும் யூன் 6-ம் திகதி முதல் மருத்துவர் உதவியுடன் நோயாளி தற்கொலை செய்துக்கொள்வது சட்டவிரோதமானது என்பதால், அந்த திகதிக்கு பிறகு இவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோன் மேயர்ஸ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை