கடத்தல் கும்பல் தலைவனுக்கு மர்ம நபர்கள் வைத்த குறி: தவறுதலாக உயிரிழந்த கார் ஓட்டுனர்

NEWSONEWS  NEWSONEWS
கடத்தல் கும்பல் தலைவனுக்கு மர்ம நபர்கள் வைத்த குறி: தவறுதலாக உயிரிழந்த கார் ஓட்டுனர்

ஜேர்மனியில் தலைநகரான பெர்லினில் கடந்த செவ்வாக்கிழமை அன்று சாலையில் சென்றுகொண்டு இருந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் அதை ஓட்டிச் சென்ற Mesut T என்ற ஓட்டுனர் உடல் சிதைந்து பலியாயினர்.

தலைநகரில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் பொலிசாரை நிலைகுலைய வைத்ததை தொடர்ந்து, ‘இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமா’? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

ஆனால், நேற்று பொலிசார் முற்றிலும் ஒரு மாறுப்பட்ட காரணத்தை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘இது தீவிரவாத தாக்குதலாக இருக்க முடியாது. வெடித்து சிதறிய காரில் இருந்து ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு நபரின் ஆவணங்கள் சிக்கியுள்ளது.

இந்த கும்பல் போதை பொருள்களை விலைபேசுவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த ரஷ்ய நபரை தீர்த்துக்கட்ட மர்ம நபர்கள் சிலர் காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், இந்த வெடிகுண்டு தாக்குதலில் எந்த தவறும் செய்யாத கார் ஓட்டுனர் பலியாகியுள்ளார். ஓட்டுனரும் ஒரு காலத்தில் போதை பொருள் கடத்திலில் தொடர்பில் இருந்துள்ளார்.

ஆனால் 2008ம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த குற்றங்களிலும் ஈடுப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த போதை பொருள் கடத்தல் சம்வங்கள் 2015ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்று இருக்கலாம்.

இதில் முக்கிய கடத்தல் தலைவன் ஏமாற்றவோ அல்லது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை கொலை செய்ய இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என்பதால் அந்த கோணத்தில் விசாரணையை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை