ஐ.நா.பாதுகாப்பு மன்ற நிரந்தர உறுப்பினர்: இந்தியா ஆலோசனை

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஐ.நா.பாதுகாப்பு மன்ற நிரந்தர உறுப்பினர்: இந்தியா ஆலோசனை

புதுடில்லி, மார்ச். 5-

ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினராக மேற்கொள்ள வேண்டிய அணுமுறைகள் குறித்து தலைநகர் புதுடில்லியில் இந்தியா உள்ளிட்ட ஜி-4 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.ஐ.நா. விவகாரங்களுக்கான பொது இயக்குநர்கள் மற்றும் இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஐ.நா.வுக்கான பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். அப்போது ஐ.நா.பாதுகாப்பு பாதுகாப்பு மன்ற நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஜி-4 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தெரிவித்தனர். ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் சையது அக்பரூதின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் கருத்துக்களை வலியுறுத்தினார்.அடுத்த சந்திப்பினை வருகிற ஜூன் மாதம் ஜப்பானில் நடத்த அனைத்து நாடுகளின் பொது இயக்குநர்களும் ஒப்புதல் அளித்தனர்.ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தில் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பை விரிவுப்படுத்தி, நிரந்தர உறுப்பினராக ஆவதற்கு இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலக்கதை