நச்சுணவு: ஈப்போவில் நான்கு பேர் கவலைக்கிடம்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
நச்சுணவு: ஈப்போவில் நான்கு பேர் கவலைக்கிடம்

 

 ஈப்போ, 5 மார்ச்- ஈப்போவில் நான்கு பேர் நச்சுணவு காரணமாக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  அந்நால்வரும் பத்து காஜாவில் உள்ள ஒரு உணவகத்தில் பூச்சுக்கொல்லி கலந்த  உணவை உட்கொண்டிருக்கலாம் என மாநில சுகாதாரம், முஸ்லிம் அல்லாதோர் விவகாரம், மற்றும் புறநகர் மேம்பாட்டு செயற்குழு தலைவர் டத்தோ டாக்டர் மாஹ் ஹாங் சூன் தெரிவித்தார்.

அந்நால்வரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

 இதனிடையே நச்சுணவால் பாதிக்கப்பட்ட நால்வருள் ஒருவர் மரணமடைந்து விட்டதாகக் பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என அவர் வர்ணித்தார்.

 

  

மூலக்கதை