யாருக்கு வாக்கு என்பதை உறுதி செய்ய தமிழ்நாட்டில் 17 தொகுதிகளில் ஏற்பாடு

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
யாருக்கு வாக்கு என்பதை உறுதி செய்ய தமிழ்நாட்டில் 17 தொகுதிகளில் ஏற்பாடு

புதுடில்லி, மார்ச்.5-

தமிழ்நாட்டில் இந்த சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் பதிவு செய்த வாக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளும் வசதி 17 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்படுகிறது. அந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் இணைக்கப்பட்ட சிறிய எந்திரத்தில் கண்ணாடிக்கு கீழே உள்ள திரையில் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பது சிறிது நேரம் தெரியும்.

இந்த புதிய வசதி செய்யப்பட தொகுதிகள் பெயர் விவரம் வருமாறு:- சென்னை அண்ணாநகர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் (வடக்கு), ஈரோடு (மேற்கு), திருப்பூர் (வடக்கு), கோவை (வடக்கு), திண்டுக்கல், திருச்சி (மேற்கு), கடலூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், விழுப்புரம், மதுரை (கிழக்கு), தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி.

மூலக்கதை