ஐபேட் மோகம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி
காஜாங், 5 மார்ச்- ஐபேட் பயன்படுத்த விடவில்லை என்பதற்காக தனது கணவரின் முகத்தை கத்தியால் கிழித்துள்ளார் அவரது மனைவி. இச்சம்பவம் காஜாங்கில் நிகழ்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி, இரவு 10.39 மணியளவில் அம்மாது தமது 51 வயதுடைய தமது கணவரைக் கத்தியால் தாக்கினார்.
சம்பந்தப்பட்ட அந்த ஐ-பேட் கருவியை அந்த கணவர் கடந்த 1 வருட்த்திற்கு முன் மனைவிக்கு பரிசாக அளித்துள்ளார். ஆனால், அதன் பிறகுதான் பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது. ஐ-பேட் கருவியே கதி என இருந்த மனைவியிடம் அதனை மீண்டும் எடுத்துக்கொள்வேன் என கணவர் மிரட்டியுள்ளார்.
தமது கணவரின் முகத்தைக் கத்தியால் கிழித்த அடுத்த நொடி, தன் தவற்றை உணர்ந்து தமது 6 வயது மகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மனைவியை மன்னித்த அவர், உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முகத்தில் 80 தையல்கள் போடப்பட்டன.
அதோடு, அவருக்கு முகத்தை வழக்கநிலைக்கு மாற்றும் அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
