ஐபேட் மோகம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஐபேட் மோகம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி

 

காஜாங், 5 மார்ச்- ஐபேட் பயன்படுத்த விடவில்லை என்பதற்காக தனது கணவரின் முகத்தை கத்தியால் கிழித்துள்ளார் அவரது மனைவி. இச்சம்பவம் காஜாங்கில் நிகழ்ந்துள்ளது. 

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி, இரவு 10.39 மணியளவில் அம்மாது தமது 51 வயதுடைய தமது கணவரைக் கத்தியால் தாக்கினார்.    

சம்பந்தப்பட்ட அந்த ஐ-பேட் கருவியை அந்த கணவர் கடந்த 1 வருட்த்திற்கு முன் மனைவிக்கு பரிசாக அளித்துள்ளார். ஆனால்,  அதன் பிறகுதான் பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது. ஐ-பேட் கருவியே கதி என இருந்த மனைவியிடம் அதனை மீண்டும் எடுத்துக்கொள்வேன் என கணவர் மிரட்டியுள்ளார்.

   தமது கணவரின் முகத்தைக் கத்தியால் கிழித்த அடுத்த நொடி, தன் தவற்றை உணர்ந்து தமது 6 வயது மகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

 மனைவியை மன்னித்த அவர், உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முகத்தில் 80 தையல்கள் போடப்பட்டன.

  அதோடு, அவருக்கு முகத்தை வழக்கநிலைக்கு மாற்றும் அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  

மூலக்கதை