‘மறுமலர்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாக அன்வாரை விடுவிக்க வேண்டும்!’ -அம்பிகா

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
‘மறுமலர்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாக அன்வாரை விடுவிக்க வேண்டும்!’ அம்பிகா

கோலாலம்பூர், மார்ச் 4-

முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் அரசியல் மாற்றுத் திட்ட நிரலின் ஒரு பகுதியாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமை சிறையிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என்று வழக்கறிஞரும் சமூகவியல் போராட்டவாதியுமான டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பை பதவியிலிருந்து அகற்றுவதை மட்டுமே கொண்டிருக்காமல், அதற்கு அப்பாற்பட்ட அம்சங்களிலும் கவனம் செலுத்தவேண்டும் என்றார் அவர்.

ஒரு நபரை அகற்றுவது என்பது மட்டுமல்ல. மறுமலர்ச்சியை எற்படுத்துவதும் அவசியம். இந்த முயற்சியானது, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நேர்மையும் சுதந்திரமும் கொண்ட தேர்தல், சட்ட ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்துதல் போன்றவற்றையும் கொண்டிருக்க வேண்டும் என்று டத்தோ அம்பிகா கூறினார்.

எனவே, அன்வாரை விடுவிப்பதும் இந்த நிரலில் இடம்பெறவேண்டும் என்றார் அவர்.

நஜிப்பை நீக்கும் கோரிக்கை குறித்து கருத்துரைத்த அம்பிகா, இதில் தனிப்பட்ட முறை விவகாரம் எதுவுமில்லை. ஜனநாயகத்தின் செயல்முறை அப்படித்தான் என்றார். அன்வாரின் விடுதலை இந்த நிரலின் ஒரு பகுதியா? என நிருபர்கள், மகாதீரிடம் கேட்டபோது, நிரலில் முதன்மையானது நஜிப்பை நீக்குவது தான் என்றார் அவர்.

 

 

மூலக்கதை