தமிழக சட்டசபைக்கு மே 16-இல் தேர்தல்! மே 19-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்!
புதுடில்லி, மார்ச் 4-
தமிழக சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் 16ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழக வாக்கு எண்ணிக்கை மே19ஆம் தேதி இடம்பெறும்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் மே 16ஆம் தேதியும், அசாமில் ஏப்ரல் 4ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 11ஆம் தேதியும் தேர்தல் நடக்கவுள்ளது. இதனைத் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டில்லியில் நிருபர்களிடம் கூறினார்.
தமிழகத்தில் தேர்தல் எப்போது வரும் என அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இதற்கென பிரசார யுக்தி மற்றும் கூட்டணியில் பிற கட்சிகளுடன் பேச்சு என மும்முரமாக இறங்கியுள்ளன.தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அரசியல் கட்சியினர் சுறு சுறுப்படைந்துள்ளனர். டில்லியில் தேர்தல் தலைமை ஆணையர் நஜீம் ஜைதி நிருபர்களைச் சந்தித்தார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை காலம் முடிவதால் தேர்தல் நடத்தப்படவுள்ளது. திருவிழா, பள்ளி தேர்வுகள் ஆகியவற்றை மனதில் வைத்து தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம், புதுச்சேரி கேரளாவில், ஒரே கட்டமாகவும் அசாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும். இன்று முதல் 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்தன.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. ஏப்ரல் 29 ஆம் தேதி மனு தாக்கலுக்கு இறுதி நாள் , ஏப்ரல் 30இல் வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் மே-2ஆம் தேதி மனு திரும்ப பெறும் நாள். ஓட்டுப் பதிவு மே 16ஆம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 19ஆம் தேதி இவ்வாறு தேர்தல் ஆணையர் ஜைதி கூறினார். கேரளாவில் மே 16 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 4, 11, 17, 21 , 25, 30 தேதிகளில் வரிசைக் கிரமமாக 6 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 11ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. 5 மாநில ஓட்டு எண்ணிக்கை ஒரே நாளில் மே 19ஆம் தேதி நடக்கும்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
