இரகசியக் காப்பு முத்திரையுடன் 1எம்டிபி கணக்குத் தணிக்கை விசாரணை அறிக்கை!!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
இரகசியக் காப்பு முத்திரையுடன் 1எம்டிபி கணக்குத் தணிக்கை விசாரணை அறிக்கை!!

 கோலாலம்பூர், மார்ச் 4-

பலமுறை தள்ளிவைக்கப்பட்டு வந்த தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் 1எம்டிபி மீதான விசாரணை அறிக்கை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் (பிஏசி) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும், அது அதிகாரத்துவ இரசியக் காப்புச் சட்டத்தின் (ஓஎஸ்ஏ) கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆடிட்டர் ஜெனரல் அம்ப்ரின் புவாங் இன்று தாக்கல் செய்தார்.

 

1எம்டிபி தொடர்பான தங்களது விசாரணையில் கண்டுபிடித்த அம்சங்களை  அம்ப்ரின் புவாங்கும் அவரது குழுவினரும் தாக்கல் செய்தனர் என்று நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான டான் செங் கியாவ் தெரிவித்தார். ஆனால், அது அதிகாரத்துவ சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

மூலக்கதை