முகிதின், ஷாபி, முக்ரிஷை நீக்காவிடில் மீண்டும் அம்னோ இரண்டாக உடையுமா?

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
முகிதின், ஷாபி, முக்ரிஷை நீக்காவிடில் மீண்டும் அம்னோ இரண்டாக உடையுமா?

கோலாலம்பூர், மார்ச் 4-

சர்ச்சைக்குரிய டான்ஶ்ரீ மொகிதின் யாசின், டத்தோஶ்ரீ ஷாபி அப்டால், மற்றும் டத்தொஶ்ரீ முக்ரிஷ் மகாதீர் ஆகிய மூவரையும் தொடர்ந்து கட்சிக்குள் வைத்திருந்தால், 1987-இல் ஏற்பட்டது போன்ற சூழல் உருவாகி, அம்னோ மிகப்பெரிய அளவில் பிளவுபடும் என்று அம்னோ ஆதரவு இணைய செய்தித் தளம் எச்சரித்திருக்கிறது.

இவர்கள் மூவரையும் நீக்காவிட்டால், மீண்டும் கட்சிக்குள் ஏ-டீம், பி-டீம் போராட்டம் ஏற்படும் என்று அது தெரிவித்தது.

இவர்களால் கட்சி உடைந்து விடும். ‘தொல்லை தரும் இளைஞர்” (டாக்டர் மகாதீர்) மீண்டும் ஒரு ‘சதி மூளை’யாக வேலை செய்யவிருக்கிறார் என்று அது கூறியது.

1987ஆம் ஆண்டில், அம்னோ பிளவுபட்டு ஏ-டீம், பி-டீம் என இரண்டானது என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ஏ-டீமிற்கு மகாதீரும் பி-டீமிற்கு துங்கு ரசாலியும் தலைமையேற்று கட்சித் தேர்தலில் போட்டியிட்டதில் மகாதீர் வென்றார். எனினும், தேர்தல் முடிவு தொடர்பான சர்ச்சை, நீதிமன்றம் வரை சென்று பின்னர் அம்னோ பதிவு ரத்தானது.

இதே நிலைமை இப்போது திரும்புகிறது. முகிதின், ஷாபி, முக்ரிஷ் ஆகியோர், கட்சியைக் கைப்பற்றுவதற்காக பிரதமர் நஜிப்பை எதிர்க்கத் திட்டமிட்டு வருகின்றனர் என்று ‘மை-கேஎம்யு’ என்ற அந்த அம்னோ ஆதரவு இணையத் தளம் கூறியது.

 

 

 

 

  

மூலக்கதை