நஜிப்பிற்கு எதிராக மகாதீரின் 'பிரஜைகளின் பிரகடனம்'

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
நஜிப்பிற்கு எதிராக மகாதீரின் பிரஜைகளின் பிரகடனம்

கோலாலம்பூர், மார்ச் 4- பிரதமர் நஜிப்பிற்கு எதிராக பிரஜைகளின் பிரகடனம் எனும் எதிர்ப்பு திட்டத்தில் துன் மகாதீர் கையெழுத்திட்டார். அவரோடு முகிதின் யாசின், சித்தி ஹஸ்மா, லிங் லியோங் சிக், அஸ்மின் அலி, அம்பிகா ஶ்ரீனிவாசன், முகிரிஸ் மகாதீர் ஆகியோரும் கையெழுத்து இட்டனர். 

நஜிப்பிற்கு எதிராக 'மலேசியாவைக் காப்பாற்றுவோம்' என்ற சுலோகனுடன் நடந்த இந்த சந்திப்பில் மொத்தம் 58 பேர் பிரஜைகளின் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டின் எதிர்க்கட்சிகளுடனான இந்த சந்திப்பு மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மூலக்கதை