இளம் வீர்ர் ரஷ்போர்டுக்கு இங்கிலாந்துக் குழுவில் இடமா?

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
இளம் வீர்ர் ரஷ்போர்டுக்கு இங்கிலாந்துக் குழுவில் இடமா?

லண்டன், மார்ச் 4-

மன்செஸ்ட்டர் யுனைடெட் குழுவின் இளம் ஆட்டக்காரர்களில் ஒருவரான மார்க்கஸ் ரஷ்போர்டு, 2016ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் போட்டிக்கான இங்கிலாந்துக் குழுவில் இடம்பெறக் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

18 வயதுடைய ரஷ்போர்டு, ஏற்கெனவே 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இங்கிலாந்துக் குழுவில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

மன்செஸ்ட்டர் யுனைடெட் குழு, அண்மையில் இவரை முதல் முறையாகக் களம் இறக்கியது. மிட்ஜிலேண்ட் குழுவுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் அர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மறுபடியும் இரண்டு கோல்களை அடித்தார்.

“ரஷ்போர்டு சிறப்பாக விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை நான் கவனித்து வருகிறேன். எனவே அவரது திறமையை நான் அறிவேன். இங்கிலாந்துக் குழுவுக்கு அவர் பொருத்தமாக அமைவார்” என்று இங்கிலாந்து தேசியக் குழுவின் நிர்வாகி ரோய் ஹட்சன் கூறினார்.

ரஷ்போர்டுக்கு தன்னுடைய முதல் நிலைக் குழுவில் விளையாட மன்.செஸ்ட்டர் அனுமதித்தது தமக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது என்று அவர் சொன்னார். 

ஆனால், இதை விட முக்கியம் என்னவெனில், இளம் ஆட்டக்காரரான ரஷ்போர்டு தன்னை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டுமே தவிர, அவருக்கு அளவு கடந்த நெருக்குதலை அளிக்கும் வகையில் ரசிகர்கள் நடந்து கொள்ளக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மூலக்கதை