எஸ்.பி.எம் பரீட்சையில் சிறப்பாகத் தேறிய மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்
19 இந்திய மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ+ பெற்றிருக்கின்றனர்!
கடந்த 2015-ம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கு அமர்ந்த 440,682 மாணவர்களில் 30,999 பேர் இந்தியர்களாவர். இவர்களில் 799 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+,ஏ மற்றும் ஏ- எடுத்துள்ளனர். மொத்தம் 19 இந்திய மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+ எடுத்து சாதனை புரிந்துள்ளனர் என கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.
மாணவர்களின் அயராத உழைப்பும், ஆசிரியர்களின் அளவற்ற தியாகங்களும், பெற்றோர்களின் அரவணைப்பும் இந்த மாணவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருப்பதாக ப.கமலநாதன் தெரிவித்தார்.
2015-ம் ஆண்டின் எஸ்.பி.எம் தேர்வில் 8,300 பேர் தமிழ்மொழித் தாளுக்கு அமர்ந்த வேளை 2,336 மாணவர்கள் தமிழ் இலக்கியத் தாளை தங்களது தேர்வுப் பாடமாக எடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2015-ல் எஸ்.பி.எம் தேர்வுக்கு அமர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தமிழ்மொழிப்பாடம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதோடு தமிழ்மொழி இலக்கியத்தில் நமது மாணவர்கள் 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2% கூடுதலாகத் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என கல்வித் துணையமைச்சர் தெரிவித்தார்.
மேற்கல்வியைத் தொடர இந்த எஸ்.பி.எம் தேர்வு ஒரு படிக் கல். ஆகவே சிறப்பாகத் தேறாத மாணவர்கள் மனம் தளராமல், தங்களுக்குப் பிடித்தத் துறையில் கல்வியைத் தொடர வேண்டும். அதோடு பெற்றோர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர சிறப்பாகத் தேறிய மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி மனதைப் புண்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டும். அதோடு மிகச் சரியான மேற்கல்வியைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். முடிந்த வரையில் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் மேற்கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. அதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் தமது அலுவலகம் வழங்குவதாகவும் கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
