“எதிர்க்கட்சியுடனும் சேர்ந்து செயல்படத் தயார்!”– துன் மகாதீர்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
“எதிர்க்கட்சியுடனும் சேர்ந்து செயல்படத் தயார்!”– துன் மகாதீர்

கோலாலம்பூர், மார்ச், 3-

நாட்டின் நலனுக்கு அவசியம் என்றால் எதிர்க்கட்சியுடன் கூட சேர்ந்து செயல்பட தாம் விரும்புவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“நான் யாருடனும் இணைந்து பணி செய்திருக்கிறேன். நாட்டின் நலனுக்கு உகந்தது என்றால் எதிர்க்கட்சியுடனும் நான் வேலை செய்வேன்” என்று அவர் சொன்னார்.

எதிர்காலத்தில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிமுடன் சேர்ந்து அரசியலில் பணிபுரிவது பற்றி பரிசீலிப்பீர்களா? என்று புளூம்பெர்க் டிவி தனது நேர்காணலில் கேள்வியெழுப்பிய போது மகாதீர் மேற்கண்ட பதிலை அளித்தார்.

அடுத்து 2018ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வெல்லும் சாத்தியம் இருப்பதாக துன் மகாதீர் கூறினார்.

“நீங்கள் பாரிசானை ஆதரிக்கவில்லை என்றால், நிச்சயமாக, எதிர்க்கட்சி இயல்பாகவே ஜெயித்துவிடும்” என்றார் அவர்.

நஜிப் தொடர்ந்து பிரதமராக நீடிப்பாரேயானால், அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோற்கும் அபாயம் இருக்கிறது எனத் தாம் இன்னமும் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

1எம்டிபி நிறுவனம் தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், தம்முடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள பணம், ஒரு நன்கொடை தான் என்கிற நஜிப்பின் வாதத்தை மகாதீர் நிராகரித்தார். அப்படியொரு கூற்றுக்கு ஆவண ரீதியிலான ஆதாரங்கள் அவசியம் என்றார் அவர்

 

 

மூலக்கதை