ஐநா தடைக்கு பதிலடியா? மீண்டும் வடகொரியா ஏவுகணைச் சோதனை!
சியோல், மார்ச் 3-
தனது அணுவாயுத நடவடிக்கைகளுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு மன்றம் பல்வேறு தடைகளை அமல்படுத்தியுள்ள போதிலும் மீண்டும் ஏவுகணைச் சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது.
ஐ.நா.வின் பொருளாதார தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் குறுகிய தூர ஏவுகணைகளைக் கடலில் செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியுள்ளது.ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா அணுகுண்டு, அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது.
தவிர அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு மன்றக் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய தலைவர் கிம் ஜுங் யுன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.
இதனால் அந்நாட்டின் மீது சில தடைகளும் விதிக்கப்பட்டன. இருந்தபோதிலும், பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டுச் சோதனை நடத்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது வடகொரியா. இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு மன்றம் அண்மையில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
இந்த கட்டுப்பாடுகள் தங்களை எதுவும் செய்யாது என்று ஐ.நா. அமைப்புக்கு சவால் விடும் வகையில், பொருளாதார தடை விதித்த சில மணி நேரங்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.பல்வேறு குறுகியதூர ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதனை செய்துள்ளதாக தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
