மாதவிடாய் காலம்; பெண்களுக்கு விடுமுறை! இங்கிலாந்து நிறுவனம் முடிவு!
லண்டன், மார்ச், 3–
மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு மிகவும் உடல் சோர்வு ஏற்படும். சில பெண்கள் தாங்க முடியாத வலியால் அவதிப்படுவார்கள். ஆனாலும், வேலையில் இருக்கும் பெண்கள் இந்த சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயநிலை இருக்கிறது.
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் கோ எக்ஸ்சிஸ்ட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிறுவனத்தில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மருத்துவ விடுப்பாக கருதாமல் ‘பொதுவான விடுமுறையாக’ கருதப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பெக்ஸ் பாஸ்டர் கூறும் போது, மாதவிடாய் நேரங்களில் பெண்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். சிலர் வலியால் துடிப்பார்கள். அவர்கள் அதை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பார்கள்.
இது இயற்கையாக பெண்களுக்கு ஏற்படும் ஒரு அசௌகரியம். எனவே தான் அவர்களுக்கு விடுமுறை வழங்க நாங்கள் முடிவு செய்து உள்ளோம் என்று கூறினார்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கும் முறை சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
