ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதியாட்டம்: இந்தியா-வங்காளதேசம் பலப்பரிட்சை!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதியாட்டம்: இந்தியாவங்காளதேசம் பலப்பரிட்சை!

மிர்பூர், மார்ச். 3–

ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியாவும் வங்காளதேசமும் மோதுகின்றன.

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம், ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். இந்திய அணி, தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வென்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.

8ஆவது ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது.

வங்காளதேச அணி ஏற்கனவே இலங்கையை அணியை அதிர்ச்சிகரமாக தோற்கடித்து இருந்தது. தற்போது பாகிஸ்தானுக்கு அந்த அணி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா–வங்காளதேச அணிகள் வருகிற 6– ஆம் தேதி மோதுகின்றன. முன்னணி அணிகளான இலங்கை, பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டன. அந்த அணிகள் இன்று மோதும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தால் எந்த பலனும் இருக்காது. சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும்.

 

 

மூலக்கதை