கர்ப்பிணி மனைவியை பார்த்து ரசித்த இறந்து போன கணவன்! அழகான நினைவுகள்

NEWSONEWS  NEWSONEWS

இந்த புகைப்படங்களை பற்றி கூறுவதற்கு வார்தைகள் போதவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த Nicole Bennett என்ற பெண்ணுக்கு Landen(4) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் இரண்டாவது குழந்தைக்கு கருவுற்றிருந்த நிக்கோலுக்கு மார்ச் 25 ஆம் திகதி பிரவச திகதி கூறப்பட்டிருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிக்கோலின் கணவர் இறந்துவிட்டார்.

இறந்துபோன கணவருக்கு, தனது மனைவியின் கர்ப்பகாலத்தினை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது, இந்நிலையில் இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், தனது மகன் மற்றும் பிறக்கவிருக்கும் மகள் ஆகிய இருவரும் தங்களது தந்தையை மறக்ககூடாது என்ற நோக்கில், சமீபத்தில் விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் நிக்கோல் தனது 4 வயது மகனுடன் நடந்து செல்கிறார், இவர்களுடன் சேர்ந்து இறந்துபோன கணவரும் நிக்கோலின் கையை பிடித்துக்கொண்டு நடந்து வருகிறார்.

மேலும், இறந்து போன கணவர், தனது மனைவி மற்றும் மகனின் அருகில் அமர்ந்திருப்பது, இவர்களை பார்த்து ரசிப்பது என டிஜிட்டல் முறையில் இந்த புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து நிக்கோல் கூறியதாவது, இந்த புகைப்படங்கள் எனது மகனுக்கு அழகான நினைவுகளை ஏற்படுத்தும், மேலும் பிறக்கவிருக்கும் எனது மகளும் தனது தந்தைய அடையாளம் கண்டுகொள்வாள் என்று கூறியுள்ளார்.

மூலக்கதை