"தொடர்ந்து குரல் கொடுப்பேன்": முகிதின் யாசின்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
தொடர்ந்து குரல் கொடுப்பேன்: முகிதின் யாசின்

 

 கோலாலம்பூர், 3 மார்ச்- “கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட்தையடுத்து, இனி  மேலும் குரல் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள டான் ஶ்ரீ முகிதின் யாசின், கட்சியிலிருந்து நீக்கப்படும் அபாயம் குறித்து தமக்குக் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.

“அம்னோவில் நீடிப்பேன் என்பதற்காக நான்  எதுவும் செய்யாமல் இருந்துவிடுவேன் என அர்த்தமில்லை”

 “நான் தொடர்ந்து பேசினால், அம்னோவிலிருந்து விரட்டியடிக்கப்படுவேன் என கட்சியின்  தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின்  பேச்சுக்கு நான் பயப்பட மாட்டேன்” என  அவர் தெரிவித்தார்.

 

“ஒரு கட்சி உறுப்பினர் என்ற வகையில் நான் தொடர்ந்து  நியாயத்திற்காக குரல் கொடுப்பேன். இனிதான் அதிகம் குரல் கொடுக்கப் போகிறேன்” என அவர் தெரிவித்தார். 

மூலக்கதை